இ.குமாரசாமி சர்மா. யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ இ.குமாரசாமி சர்மா, 15, பீ.ஏ. தம்பி ஒழுங்கை, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், ஆஸ்பத்திரி வீதி).
xxviii, 29-142 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கொண்டின்ய கோத்ரம் பிரம்மஸ்ரீ இரத்தினசபாபதிக் குருக்கள் குமாரசாமி சர்மா – ஸ்ரீமத் பார்வதி தம்பதிகளின் 70ஆவது அகவை ‘பீமரதசாந்தி’ சிறப்புமலர். ஆசிரியர் கண்ட அனுபவங்கள், பார்த்த நிகழ்ச்சிகள், பல்துறை ஆக்கங்கள், பத்திரிகைகளில் ஆசிரியரால் எழுதிப் பிரசுரமான கட்டுரைகள் எனப் பல்வேறு அம்சங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இறைபக்தி, கல்விமான்கள் அரசசேவையாளர் சில பதிவுகள், வெளிநாட்டு அனுபவப் பதிவுகள், சில அறிஞர்கள், பார்த்த அனுபவித்த இசை நிகழ்ச்சிகள் பதிவுகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் இவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மேற்படி 70ஆவது அகவை ‘பீமரதசாந்தி’ நிகழ்வு லண்டன் ஈஸ்ட்ஹாம் முரகன் கோவிலில் 2011இல் நவம்பர் மாதத்தில் நடைபெற்றபோது சிறிய அளவில் தொகுத்து வெளியிடப்பெற்ற இம்மலர், விரிவாக்கப்பட்டு இப்போது முன்னையதை விட காத்திரமாக வெளியிடப்பட்டுள்ளது.