10894 பஞ்சாக்ஷர தீபம்.

ப.சிவானந்தசர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). சுன்னாகம்: ப.சிவானந்தசர்மா, சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (சுன்னாகம்: ஸ்ரீவித்யா கணினி அச்சகம், இணுவில்).

72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

அமரர் பிரம்மஸ்ரீ ச. பஞ்சாட்சர சர்மாவின் (13.11.1916-24.9.2003) வருஷாப்திக ஞாபகார்த்த வெளியீடு. இச்சிறு நூல் ஐந்து பிரிவகளாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. சுடர் ஏற்றல்-நிவேதனமாக ஆரம்பிக்கின்றது. நெய்வார்த்தல்- அன்பர்கள் அறிஞர்களின் அஞ்சலிகளாகத் தொடர்கின்றது. திரிதூண்டுதல்- அமரர் அவர்களின் வாழ்வில் பெற்ற பெருமைகளை விபரிக்கின்றது.  நான்காவது பகுதியான ஒளிவீசுதல்- அமரரின் சமூகசேவைகளின் பட்டியலாக விரிகின்றது. இறுதிப்பகுதியான சரவிளக்கு- மரபுத் தொடர்ச்சி என்பதற்கிணங்க அமரர் ச.பஞ்சாட்சர சர்மா அவர்களின் வம்சாவளி பற்றிய வரலாற்றைத் தருகின்றது.

ஏனைய பதிவுகள்