10895 புரட்சியிற் பூத்த பூ.

கரவையூர் செல்வம். யாழ்ப்பாணம்: யாழ்.அமலமரி தியாகிகள் வெளியீடு, 2வது பதிப்பு, பெப்ரவரி 2001, 1வது பதிப்பு, டிசம்பர் 1976. (கொழும்பு: Dreamland Printers).

xix, 146 பக்கம், தகடுகள், விலை: ரூபா 75.00, அளவு: 22×14 சமீ., ISBN: 955-97400-0-8.

கரவெட்டியில் பிறந்து வளர்ந்து, அங்கேயே தொடக்கக் கல்வியைப் பெற்றபின்னர் கொழும்பிலும் கண்டியிலும் திருத்துவக் கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடர்ந்தவர் கரவையூர் செல்வம் என்றழைக்கப்படும் செல்வரட்ணம் அ ம தி அவர்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்த இவர் கொழும்பு 13இல், புனித லூசியாள் பேராலயத்தில் அருட்பணியாற்றிய வேளையில் எழுதிய நூல் இது. அமலமரி தியாகிகள் சபையினை தோற்றுவித்த ஆயர் புனித இயுஜீன் டீ மசெனெட் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்நூலில் சுவையாகக் கூறியிருக்கிறார். இலங்கையில் அமல மரித் தியாகிகள் சபை கால்பதித்து 150 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் தாபகரின் வாழ்க்கை வரலாற்றைச் சுவையாக 33 இயல்களில் விபரித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்