செபமாலை அன்புராசா. யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, யாழ்ப்பாண மாவட்டம், 1வது பதிப்பு, ஐப்பசி 2001. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
xii, 47 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
30.08.1875 அன்று மானிப்பாயில் பிறந்த சுவாமிநாதபிள்ளை வைத்தியலிங்கம், பின்னாளில் சுவாமி ஞானப்பிரகாசராகிய வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது. சுவாமியின் வாழ்க்கைக் குறிப்புகள் சில, கருவாகி, உருவாகிக் குருவானது (மானிப்பாய் பெற்ற செல்வம், அச்சுவேலி வளர்த்த மைந்தன், மாதா பிதா குரு, கற்க கசடறக் கற்பவை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பணி வாழ்வில் காலடி), அற்புதமான ஆளுமையும், அதிசயிக்கும் ஆற்றல்களும் (அ.ம.தித் துறவி, ஏழையின் நண்பன், திருமறைத் தூதன், பன்மொழிப் பண்டிதர், தர்க்கப் பிரசங்கத்தின் தந்தை, வரலாற்று வித்தகன், கலைக்களஞ்சியம், எழுதுகோலை ஏந்தியவர், சகலகலா விற்பன்னர்), சுவாமியின் வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்கள் ஆகிய நான்கு தலைப்புகளின்கீழ் இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131270).