ச.அம்பிகைபாகன். யாழ்ப்பாணம்: ச.அம்பிகைபாகன், நூற்றாண்டுப் பிறந்ததின விழா வெளியீடு, மணிமனை, மல்லாகம், 1வது பதிப்பு, ஜுன் 1972. (யாழ்ப்பாணம்: சி.ச.குமாரசுவாமி, உரிமையாளர், ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
ix, 116 பக்கம், தகடு, புகைப்படம், விலை: ரூபா 3.00, அளவு: 18.5×12.5 சமீ.
யோக சுவாமிகள்(வாழ்க்கை வரலாறு).
ச.அம்பிகைபாகன். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, மீள்பதிப்பு, 2014, 1வது பதிப்பு, ஜுன் 1972. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 98 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0881-09-3.
பன்னிரு வாரங்களாகத் தினகரன் வார மஞ்சரியில் வெளிவந்;த ஆசிரியரின் கட்டுரைகளின் திருத்திய வடிவம் இந்நூலுருவாகியுள்ளது. மெய்ஞ்ஞான பாரம்பரியம், தோற்றமும் இளமைப்பருவமும், உத்தியோக வாழ்க்கையும் சமய சாதனையும், விவேகானந்தர் தரிசனமும் குரு தரிசனமும், கதிர்காம யாத்திரை, அடியார் உறவும் அன்பர் வரவும், அரசியல் தலைவர்கள் வருகை, சைவசமய பரிபாலனம், மதுவிலக்கு, விவசாய விருத்தி, சிவதொண்டன் பத்திரிகை, சிவதொண்டன் நிலையம், சுவாமிகளின் வெளியூர்ப் பிரயாணங்கள், சுவாமிகளின் பிற்கால வாழ்க்கையும் சமாதிப்பேறும், சுவாமிகளின் அருள் மொழிகள், சுவாமிகளின் திருமுகங்கள் ஆகிய இயல்களில் இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129389).