கவிஞர் கண்ணையா (இயற்பெயர்: எம்.இராமையா), உமா இராசையா. வவுனியா: எம்.இராமையா, 1வது பதிப்பு, ஜுலை 2000. (வவுனியா: ஆதவன் அச்சகம்).
79 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.
இந்நூல் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவசுப்பிரமணிய (சிலுவை) சுவாமிகளுக்குப் பாதகாணிக்கையாக அவரது சீடர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 01.01.1926 இல் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த சுவாமிகள் பின்னாளில் சைவசமயத்தினைப் பின்பற்றி வவுனியாவில் உள்ள அன்பகத்தில் (அகில இலங்கை இந்து அன்பகம்) 31.01.2000இல் அமரத்துவமடைந்தவர். அவரது மறைவின் பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்று நூலாகவும், அவர் நிகழ்த்திய சித்துக்கள், அற்புதங்களின் நினைவுப் பதிகையாகவும் அமையும் வகையில் இந்நூல் எழுதப்பெற்று 12.7.2000 அன்று சுவாமிகளின் முதலாவது குருபூசை தினத்தில் சமாதி தூபி கட்டிட அரங்கில்; வெளியிடப்பட்டுள்ளது.