பா.துவாரகன் (மலர் ஆசிரியர்). காரைநகர்: வியாவில் ஐயனார் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: தேவி அச்சகம், 140/1, மானிப்பாய் வீதி).
(48+34), 408 பக்கம், வண்ணத்தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.
காரைநகர், ஈழத்துச் சிதம்பரம் எனப்போற்றப்படும் திண்ணபுரம் சிவன்கோவில் சிவகுலத்தின் குருத்துவ பாரம்பரியத்தில் தோன்றிய பண்டித கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் (22.9.916-25.4.2015) அவர்களின் நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்டுள்ள பாரிய தொகுப்பு நூல் இது. கணபதீஸ்வரக் குருக்களின் மகனான இவர் மகாவித்துவான் சி.கணேசையரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தவர். அப்பெரியாரின் தமிழ், சமயப்பணிகள் பற்றிய 88 கட்டுரைகளும், அவரது வாழ்வுடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்களின் புகைப்படப்பிரதிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.