10900 சரித்திர நாயகர் பாக்கீர் மாக்கார்.

பாத்திமா முக்தார். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661, 665, 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

x, 192 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-30-5318-3.

அல்ஹாஜி முகம்மது அப்துல் பாக்கீர் மாக்கார் (12.05.1917-10.09.1997)அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல். தென்னிலங்கையில் பேருவளையைச் சேர்ந்த இவர் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் பயின்று கொழும்பு சட்டக்கல்லூரியில் கற்றுத்தேர்ந்து சட்ட அறிஞராகியவர். இலங்கை அரசியலில் நுழைந்து 1978-1983 காலகட்டத்தில் 12ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றியவர். 1988-1993 காலகட்டத்தில் தென்மாகாண ஆளுநராகவும் பணியாற்றியவர். இந்நூலில், அராபியர் வருகையும் குடிப்பரம்பலும், பாட்டனார் அலியா மரைக்காரின் கவித்துவமும் மருத்துவமும், தாய் வழிக் குடும்பம், குழந்தைப் பருவமும் கல்வியும், யுத்தச் சூழலும் சட்டக் கல்வியும், அரசியலில் முதல் அடி வைத்தார், ஆரம்பம் சறுக்கியது, ஏழைப் பங்காளர், திருமண வாழ்வு, தந்தையார் மறைவு, பாராளுமன்றத்தில் நுழைந்தார், தந்தையும் மகனும் அரசியலில் ஒன்றாக, நளீம் ஹாஜியார் கைது, பட்டொளி வீசியது பச்சைக்கொடி, சபாநாயகரானார் பாக்கீர் மாக்கார், எண்ணத்துக்கேற்பவே கருமம், இரு மன்றங்களின் நாயகர், மிருகக் காட்சி சாலைகளும் பாக்கீர் மாக்காரும், சிலையொன்று கண்டு மனம் உடைந்த பாக்கீர், தொடரும் சேவைகள், வத்ஹிமி மஹா ராஜா எனும் மூன்றாம் புவனேஹபாகு, இலங்கையின் முதல் முஸ்லிம் ஆளுநர், சுடப்பட்டார் பாக்கீர் மாக்கார், சுபஹின் பாங்கோசையோடு பிரிந்தது இன்னுயிர். மனம் வாழும் தலைவர், ஆதாரங்கள் ஆகிய 26 அத்தியாயத் தலைப்புகளின்கீழ் அமரர் பாக்கீர் மாக்கார் அவர்களின் வாழ்வும் பணிகளும் சிறபபித்துக் கூறப்பட்டுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 199600). 

ஏனைய பதிவுகள்