கே.வி. இராமசாமி. கண்டி: அகிலம் பப்ளிக்கேஷன்ஸ், 98, டி.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. இலங்கையில் ஐந்தாண்டுகள் இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய பி.பி.தேவராஜ் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய சிறு நூல் இது. கண்டிப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட பி.பி.தேவராஜ் அவர்கள் கொழும்பு மாவட்டத்தின் இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்களாக 1994இல் போட்டியிட முன்வந்த வேளையில் இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சிறுநூல் தொகுப்பு).