நினைவுக்குழு. வவுனியா: தோழர் சூடாமணி நினைவுக் குழு, வவுனியா மாவட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
மார்க்சிய உலக நோக்கினூடாக சமூக மாற்றம் என்னும் இலட்சியப் பாதையை இளவயதிலேயே வரிந்துகொண்டு, தன் முதுமைக்காலம் வரை அதனைப் பின்பற்றி வந்தவர் காங்கேசன்துறையைச் சேர்ந்த தோழர் இ.கா.சூடாமணி. புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் மூத்த தோழரும் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இவர் வர்க்கப் போராட்ட உணர்வு, துணிவு, தியாகம், அர்ப்பணிப்பு, மக்களுக்கான சேவை, எளிமையான வாழ்வு, கடுமையான பணி, கட்சிக் கொள்கை மீதான பற்றுறுதி, கட்சிக்கும் மக்களுக்கும் இறுதிவரை நேர்மையாக வாழ்ந்து வந்தமை போன்றவற்றால் இலங்கையில் தனக்கென ஒரு தனித்தடத்தைப் பதித்துச் சென்றவர். உள்ளகப் புலப்பெயர்வால் 1995இல் வவுனியாவக்குக் குடிபெயர்ந்தவர். புதிய பூமி, புதிய நீதி, தாயகம் போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தவர். இவரது முதலாம் ஆண்டு நினைவுகூரலின்போது 30.03.2014 அன்று நினைவுக் குழுவினரின் சார்பாக வழங்கப்பட்ட உரை.