10905 அர்ப்பண வாழ்வின் வலிசுமந்த மனிதன்: சொ.அ.டேவிட் ஐயா.

எம்.பௌசர் (பதிப்பாசிரியர்). லண்டன் SE18 3HF: சமூகம் இயல் பதிப்பகம், 166, Plum Lane, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (சென்னை 600 086: Compuprint Premier Designs and Print House).

68 பக்கம்,  புகைப்படங்கள், விலை: £ 4.00, அளவு: 22×12.5 சமீ.

சொலமன் அருளானந்தம் டேவிட் (24.4.1924-11.10.2015 x) தனது 91ஆவது வயதில் தமிழகத்தில் காலமான பொழுது லண்டனில் ஒழுங்குபடுத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வொன்றின்போது இந்நூல் வெளியிடப்பட்டது. டாக்டர் சோ.இராஜசுந்தரத்துடன் இணைந்து 70களின் தொடக்கத்தில் காந்தீயம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் டேவிட் ஐயா. 1983இல் மட்டக்களப்புச் சிறையுடைப்பில் இருந்து தப்பித் தமிழகத்தில் அகதியாக வாழ்ந்துவந்தார். இலங்கையில் கிளிநொச்சி,  வவுனியா, திருக்கோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் வசதியற்ற ஏழை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி, கல்வி மற்றும் சுகாதார, ஆரோக்கிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் அம்மக்களின் இருப்பினை வலுவாக்குவதிலும் அரச குடியேற்றத் திட்டங்களிலிருந்து தாயக மண் அபகரிக்கப்படுவதனை தடுத்து நிறுத்தவும் தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர். இலங்கைப் படையினரால் 1983 ஏப்ரலில் கைதுசெய்யப்பட்டு பனாகொடை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு இரண்டு மாதங்களின்பின் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். 1983 கறுப்பு ஜுலையில் அச்சிறையில் நடந்தேறிய கொடூர அரசியல் படுகொலைகளை நேரில்கண்ட சாட்சி இவர். இவருடன் கைதுசெய்யப்பட்ட ராஜசுந்தரம் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் 1983 ஜுலையில் படுகொலை செய்யப்பட்டனர். அப்படுகொலையிலிருந்து உயிர்தப்பியிருந்த இவர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் பின்னர் மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டு, பின்னர் அச்சிறையிலிருந்த போராளிகளின் விடுவிப்பிற்கான சிறையுடைப்பின்போது காப்பாற்றப்பட்டு சிறைமீண்டவர். அமரர் டேவிட் ஐயா பற்றிய அவருடைய அணுக்கத் தோழர்கள், நண்பர்களின் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மு.பாக்கியநாதன், ஜென்னி ஜெயச்சந்திரன், பீ.ஏ.காதர், பீமன், வ.ந.கிரிதரன், நிலாந்தன், இ.பூபாலசிங்கம், க.சச்சிதானந்தன் (ஆங்கிலக் கட்டுரை) ஆகியோரது நினைவுப் பதிகைகளும், விஜயகுமாரனின் கவிதையும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

13768 வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்.

சந்திரகௌரி சிவபாலன் (புனைபெயர்: கௌசி). ஜேர்மனி: ஜேர்மனி தமிழ்க் கல்விச் சேவை, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). xxiv, 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: