ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ப.கா.மகாதேவா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).
52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. அமரர் மு.கதிர்காமநாதன் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக 2010-2012 காலகட்டத்திலும், பின்னர் 2015 முதல் மரணிக்கும் வரையிலுமான காலகட்டத்திலும் தலைவராகப் பணியாற்றியவர். 17.01.2016 அன்று காலை தமிழ்ச்சங்கத்தின் வினோதன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஆட்சிக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் சுகவீனமாகி சுயநினைவற்று மயங்கிய இவர் பின்னர் 02.02.2016 அன்று நினைவு திரும்பாமலேயே உயிர்நீத்தார். தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் பல வேலைத் திட்டங்களை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்திருந்தவர் இவர். திருக்குறள் மாநாடுகளை சங்கத்தின் சார்பில் நடத்தியவர். முப்பால் நூலை வெளியிட்டவர். ஓலை என்ற சங்கச் சஞ்சிகையை சங்கத்தமிழாக பெயர்மாற்றம் செய்து புது மெருகுடன் சிறப்பாக வெளியிட்டவர். சங்கத்தின் மூன்றாம் மாடியில் ஐந்து விருந்தினர் அறைகள் இவர் காலத்திலேயே பூர்த்திசெய்யப்பட்டன. ரூபா 10 லட்சம் பெறுமதியான கதிரைகள், கணனிகள் என்பவற்றை அரசியல்வாதிகளுடன் தொடர்புகொண்டு சங்கத்திற்காக அன்பளிப்பாகப் பெற்றமை, சங்கத்தின் நினைவு முத்திரை வெளியிட்டமை, சங்கத்தின் முகப்பில் அலங்கார வளைவொன்றை நிர்மாணித்தமை என்பன இவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் சில வேலைத் திட்டங்களாகும். இந்நினைவு வெளியீட்டில் அமரர் பற்றிய நினைவுப் பதிகைகளை ஜீ. இராகுலேந்திரா, ஆ.கந்தசாமி, செல்வ திருச்செல்வன், சபா.ஜெயராசா, சு.செல்லத்துரை, தம்பு சிவா, த.அரியரத்தினம், சோ.சந்திரசேகரம், இ.ஜெயராஜ், கந்தையா நீலகண்டன், இரகுபதி பாலஸ்ரீதரன், ந.கருணை ஆனந்தன், ப.க.மகாதேவா, வசந்தி தயாபரன், தி.ஞானசேகரன், பத்மா சோமகாந்தன், கனகசபாபதி நாகேஸ்வரன், கதிரவேலு மகாதேவா, மு.மனோகரன், கே.பொன்னுத்துரை, சின்னத்துரை தனபாலா, உடப்பூர் வீரசொக்கன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோரின் அஞ்சலிப் படைப்புக்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.