லால் பிரேமநாத் த மெல் (மூலம்), சிவசாமி சண்முகநாதன் (தமிழாக்கம்). இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீடு, 41, லும்பினி மாவத்தை, 1வது பதிப்பு, 1999. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா).
(6), 88 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 955-599-126-X.
இலங்கை சர்வோதய சிரமதான இயக்கத்தின் தந்தை எனக் கருதப்படுபவர் கலாநிதி ஏ.ரீ.ஆரியரத்ன அவர்கள். அவரது வாழ்க்கைச் சரிதையை சிறுவர்களுக்கேற்ற விதத்தில் லால் பிரேமநாத் த மெல் வழங்கியுள்ளார். 45 ஆண்டுகாலமாக சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு எழுதிவரும் ஆசிரியரின் இந்நூல் ஒரு கிராமத்தின் கதை, ஒரு குமாரன் பிறந்தான், மனித நேயம்கொண்ட ஒருவர் பிறந்துவிட்டார், ஒரு புத்தகத்தின் மகிமை, தீப்பந்தமேந்தி பாடசாலை சென்ற பிள்ளை, பணம் தான் எல்லாம் என்பதல்ல, கடமையில் கண்ணாயிருக்க வேண்டும், வாழ்க்கையில் இப்படியும் ஒரு பைத்தியக்கார வேலையா?, காலம்தான் சரியான நீதிபதி, இல்லை, முடியாது-இவை தடைசெய்யப்பட்ட சொற்கள், ஒரு குருதேவர், மௌனப் புரட்சியின் ஆரம்பம், துணிச்சல்மிக்க ஒரு மனிதன், கோபுரமும் வயலும் வாவியும், மௌனப்புரட்சி தொடர்கிறது, கிராமத்தையும் புத்தகோவிலையும் சிங்களவரையும் ஒன்றுசேர்த்த சிரேஷ்ட மனிதன், ஆரியரத்னாவின் பாதை எது?, நாங்கள் விழித்தெழுவோம், கிராமத்திற்கே முதலிடம் அளிக்கப்படவேண்டும், எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்பதே சர்வோதயத்தின் நோக்கமாகும், கிராமத்திலிருந்து நகரத்திற்கு, எமது நாட்டை நாமே அமைப்போம், சர்வோதயம் உலகெங்கும் வேரூன்றுகின்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், அதியுயர்ந்த சேவைக்கு விருது பெறுகிறார், அவர் ஒரு யுகபுருஷன் ஆகிய தலைப்புகளின்கீழ் ஆரியரத்தினாவின் வாழ்வையும் பணிகளையும் விபரிக்கின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 153092).