லெனின் மதிவானம். கிளிநொச்சி: மகிழ், 754, திருநகர் வடக்கு, இணை வெளியீடு, நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Linkesvei, 9A, 6006 Aalesund, 1வது பதிப்பு, 2014. (தெகிவளை: ரீஜீ அச்சகம்).
xx, 143 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ.
சமூக ஒடுக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், அவற்றின் வெற்றி தோல்விகள் ஆகியவற்றை இந்நூல் எடுத்துக் காட்டியுள்ளது. எதையும் உணர்வுபூர்வமாகச் சிந்திக்க முனைவோரை அறிவுபூர்வமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில் தொகுப்பின் ஆக்கங்கள் அமைந்துள்ளன. தோழர் ஏப்ரஹாம் சிங்கோ, சிவனு லட்சுமணன், மு.சி.கந்தையா, தோழர் இளஞ்செழியன், போன்றோர் மலையகத் தமிழர்களின் எழுச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. இந்தியத் தமிழர்களாக இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றும் தமது உரிமைகளுக்காகப் போராட வேண்டியதொரு சூழல் காணப்படும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்ள எமது மலையகத் தோழர்கள் சிந்திய இரத்த அனுபவங்களை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. தோழர் ஏப்ரஹாம் சிங்கோ, சிவனு லட்சுமணனை நினைவுகூரல், மு.சி.கந்தையாவின் நிசங்களின் சத்தம், மலையக சமூகத்தின் நினைவுப் பதிவுகள், மலையக தேசியம் பற்றிய தோழர் இளஞ்செழியனின் சமூக நோக்கும் பங்களிப்பும், மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சினைகளும் சவால்களும், கே.ஆர். டேவிட்டின் இரு சிறுகதைத் தொகுதிகள்: ஒரு மதிப்பீடு, தெணியானின் ஒடுக்கப்பட்டவர்கள்: ஒரு சுருக்கமான விமர்சனக் குறிப்பு, அமரர் பிரேம்ஜி-ஓர் அமைப்பாக்கவாதி, கைலாசபதி பற்றிய மீள்பார்வை, கே.ஏ.சுப்பிரமணியம்- சில பதிவுகள், ஜீவநதி நேர்காணல் ஆகிய 11 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.