முருகர் குணசிங்கம் (தொகுப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: எம்.வி.வெளியீடு, தென் ஆசியவியல் மையம், தபால் பெட்டி எண். 5317, சுலோறா, சிட்னி, நியு சவுத் வேல்ஸ் 2190, 1வது பதிப்பு, வைகாசி 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
830 பக்கம், வண்ணப்படங்கள், விலை: £ 25, அளவு: 30×21 சமீ., ISBN: 978-0-646-94530-9.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் 18.07.1996 இல் முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஒயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளி கப்டன் இராமகுமார் (ச.யோகேஸ்வரன்;) முதல், 30.12.2000 இல் மணலாற்றுப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் துசி அல்லது நம்பி (க.பிரதீபன்) ஈறாக இத்தொகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் இயக்கப் பெயர், இயற்பெயர், சொந்த இடம், பிறந்த திகதி, மறைந்த திகதி, மறைவுக்கான களச் சம்பவம் ஆகிய முக்கிய தகவல்களை வண்ணப் புகைப்படங்களுடன் இந்நூலில் தேடித் தொகுத்து வெளியிட்டுள்ளார். இத்தகைய பதிவுகள் முன்னர் சிறிய அளவில் முனனெடுக்கப் பட்டிருந்த போதிலும், இரண்டு பாகங்களில் ஆகுதியான 20,000 போராளிகளின் விபரங்களைத் தாங்கி வெளியிடப்பட்ட நூல் தொகுதி என்ற வகையில் இப்பாரிய பதிவாக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது.