யாழ்ப்பாணம்: தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, நவம்பர் 1992. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம்).
(2), 194 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 20.5×14 சமீ.
வீரச்சாவடைந்த போராளிகளைப் பற்றிய பதிவுகளைக்கொண்ட இக்குறிப்புகள், ஈழநாதம் பத்திரிகையில் ‘விழுதுகள்’ என்னும் பகுதியில் வெளிவந்தவை. இவற்றை மாவீரரின் உள்ளுணர்வுகளைக் கூடவே இருந்து புரிந்துகொண்ட சக போராளிகளே அவ்வப்போது எழுதி வழங்கியிருந்தார்கள். மேஜர் அழகன், கப்டன் பிரான்ஸிஸ், கப்டன் அஜித்தா, மேஜர் தாடிபாலா, கப்டன் சாரா, கப்டன் ஆஷா, மேஜர் ஜேம்ஸ், லெப்.ராதா, கப்டன் அக்கினோ, மேஜர் லம்பா, லெப். லக்ஸ்மன், மேஜர் பாரதி, மேஜர் வீமன், கப்டன் வீரமணி, மேஜர் தாரணி, லெப். மணிமாறன், மேஜர் ஜோன்சன், கீதா, லெப். இளஞ்செழியன், மேஜர் அன்ரனி, ஜஸ்மின், லெப்.கேணல் நவம், கப்டன் பரஞ்சோதி, கப்டன் பாண்டியன், மேஜர் வேணு, கப்டன் தேனுஜா, கப்டன் எல்லாளன், மேஜர் டயஸ், லெப்.சோமேஸ், மேஜர் கார்வண்ணன், சின்ன நசீர் ஆகிய 31 போராளிகளைப் பற்றிய பதிவுகள் அவர்களது புகைப்படங்களுடன் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 90228).