எஸ்.எச்.எம்.ஜெமீல், எம்.அலி அஸீஸ் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: கலாநிதி எ.எம்.எ.அஸீஸ் மன்றம், 47/2 A, பிரெட்ரிகா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 154 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-41719-0-9.
நினைவுகள், வாழ்த்துப் பாக்கள், எ.எம்.எ.அஸீஸினால் எழுதப்பட்ட கட்டுரைகள் என மூன்று பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ள 20 ஆக்கங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. நினைவுகள் என்ற முதலாவது பகுதியில் மரீனா இஸ்மாயில், எஸ்.எச்.எம்.ஜெமீல், கார்த்திகேசு சிவத்தம்பி, சுசில் சிரிவர்த்தன, முகம்மது மன்சூர் அலம் ஆகியோரின் வாயிலாக எ.எம்.எ.அஸீஸ் பற்றிய நினைவுகள் மீட்கப்பட்டுள்ளன. வாழ்த்துப்பாக்கள் என்ற இரண்டாம் பிரிவில் சீ.பீ. மீடின், கவிஞர் அப்துல் காதர் லெப்பை, க.மார்க்கண்டு, பண்டிதர் செ.பூபாலபிள்ளை, கே.அழகரத்தினம், மக்கூன் எஸ்.ஏ.எச்.ஆகியோரின் வாழ்த்துக் கவிதைகளும், மருதமுனை அரசினர் பாடசாலை, குறுமன்வெளி ஐக்கிய பண்டகசாலைத் திறப்புவிழாக் குழு, ஆகிய அமைப்புகளின் வாழ்த்துக் கவிகளும் உள்ளிட்ட பதினொரு வாழ்த்தப்பாக்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில் அஸீஸ் அவர்கள் எழுதிய நான்கு கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. யான் அறிந்த விபுலாநந்த அடிகள், யாழ்ப்பாணம் அசனா லெப்பை நினைவுதினம்: அறபுத்தமிழ் வளர்த்து அரும்பணி புரிந்த ஆலிம் புலவர், வித்துவதீபம் அப்துல் காதிறுப் புலவர், முஸ்லிம் முன்னேற்றத்தின் முன்னோடி அறிஞர் சித்தி லெவ்வை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. கலாநிதி எ.எம்.எ.அஸீஸ் (04.10.1911-24.11.1973)அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 200764).