எஸ்.எஸ்.இராஜேந்திரா (தொகுப்பாசிரியர்). கண்டி: அமரர் செ.நடராஜா நினைவு மலர் வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு, ஜுன் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(23), 283 பக்கம், புகைப்படங்கள், 19 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
19.06.2006அன்று கண்டியில் அசோகா வெள்ளிவிழா மண்டபத்தில் தீயுடன் சங்கமமான ‘சொல்லின் செல்வர்’ அமரர் செல்லையா நடராஜா, 7.7.1940இல் பிறந்தவர். கண்டி அசோகா வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றியவர். அவரது மறைவின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. 1963இல் ஸ்தாபகர் பா.த.இராஜன் அவர்களின் அழைப்பின்பேரில் தான் கற்றுத்தேர்ந்த பாடசாலையான அசோகா வித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியில் இணைந்துகொண்ட அமரர் செ.நடராஜா 1965இல் உதவி அதிபராகப் பணியேற்றவர். 1971முதல் ஜுன் 2006இல் அவர் மரணமாகும் வரை அப்பாடசாலையின் அதிபராகப் பணியாற்றியவர். இந்நூல் அவரது வாழ்வும் பணிகளும் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் விரிவான மனப்பதிவுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மாணவர்கள் பரீட்சைக்குத் தயார் செய்துகொள்வது எவ்வாறு?, வாசிக்கும் பழக்கத்திற்கு நமது வாரிசுகள், மூன்றாம் நிலைக் கல்வியும் மலையகக் கல்வி அபிவிருத்தியும், பெருந்தோட்டப் பெண்கள் நேற்று இன்று நாளை, மலையகப் பல்கலைக்கழகம், காற்றில் செல்வாக்குச் செலுத்தும் ஞாபகசக்தி, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களும் இன அடையாளமும் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.