க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 112 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-467-6.
உலக அரங்கில் தமிழின் தொன்மையையும் வளத்தையும் நிறுவுவதற்கு ஏற்றதாக ‘உலகத் தமிழாராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பை நிறுவிய தனிநாயக அடிகளின் வாழ்க்கையையும் பணிகளையும் அவரது ஆளுமையையும் தமிழின் வரலாற்றில் அவருக்குரிய இடத்தையும் உள்ளபடி உணர்த்தும் வகையில் எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். தனிநாயகம் அடிகளார்: வாழ்வும் பணியும் (தொகுப்பு: க.குமரன்), தனிநாயகம் அடிகளாரும் உலக அரங்கிலே தமிழாராய்ச்சியும் (கலாநிதி சி.பத்மநாதன்), சேவியர் தனிநாயகம் அடிகளாரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் (பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்), கீழைத்தேயவியல்-தமிழியல்: பேராசிரியர் சேவியர் எஸ்.தனிநாயகம் அவர்களின் வகிபாகம் (பேராசிரியர் வீ.அரசு) ஆகிய நான்கு கட்டுரைகளும், பின்னிணைப்பாக தனிநாயகம் அடிகளார் வாழ்வில் முக்கிய திகதிகள், அடிகளாரின் எழுத்துக்களின் பட்டியல் என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன.