க.சுவர்ணராஜா, மாலதி முகுந்தன், ஜெலா மேபிள் பரமநாயகம், பரா.ரதீஸ் (பதிப்பாசிரியர்கள்). வவுனியா: பேராசிரியர் சின்னத்தம்பி கல்விச்சேவை பொன்விழாக் குழு, வியாபார கற்கைகள் பீடம், வவுனியா வளாகம், உள்வட்ட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3. ரம்யா பிளேஸ்).
xxxvi, 238 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ.
பேராசிரியர் சின்னத்தம்பி கல்விச்சேவை பொன்விழா மலர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துச் செய்திகள் முதலாவது பிரிவிலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி: ஒரு நோக்கு என்ற பிரிவில் க.சிவத்தம்பி, சபா.ஜெயராசா, பசுபதி சிவநாதன், மா.செல்வராஜா ஆகியோர் பேராசிரியர் சின்னத்தம்பி பற்றி எழுதிய கட்டுரைகள் இரண்டாம் பிரிவிலும் இடம்பெறுகின்றன. தொடர்ந்து 35 ஆய்வுக் கட்டுரைகள், மூன்றாம் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளை மா.கருணாநிதி, மா.சின்னத்தம்பி, மா.செல்வராஜா, சோ.சந்திரசேகரன், வை.நந்தகுமார், ஜெ.இராசநாயகம், திருமதி ச.குகமூர்த்தி, எஸ்.சிவலிங்கராஜா, எம்.ஏ.நுஃமான், சி.மௌனகுரு, பொன் பாலசுந்தரம்பிள்ளை, எம்.எஸ்.எம்.அனஸ், ந.இரவீந்திரன், ம.நடராஜசுந்தரம், க.தேவராஜா, தி.வேல்நம்பி, அனுஷ்யா சத்தியசீலன், அம்மன்கிளி முருகதாஸ், சபா ஜெயராசா, செ.யோகராஜா, ப.கா.பக்கீர் ஜஃபார், எஸ்.ஜே.யோகராஜா, எஸ்.சிவயோகன், பீ.எம்.ஜமாஹிர், கோணமலை கோணேசபிள்ளை, கே.கஜவந்தன், தயா சோமசுந்தரம், மரியா பெரேரா, மஞ்சுளா விதானபத்திரான, சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா, விமலா கிருஷ்ணபிள்ளை, இந்திரா லீலாமணி கினிகே, கொட்வின் கொடித்துவக்கு, ஏ.வீ.மணிவாசகர், த.கலாமணி ஆகியோர் எழுதியுள்ளனர்.