எஸ்.ஜெபநேசன். வட்டுக்கோட்டை: கலாநிதி எஸ். ஜெபநேசன், முதல்வர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1989. (யாழ்ப்பாணம்: அமெரிக்க இலங்கை மிஷன்அச்சகம், 182, 1ம் குறுக்குத் தெரு).
iv, 44 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
1816ஆம் ஆண்டில் ஒக்டோபர் 15ம் திகதி தெல்லிப்பழையில் தேவ ஊழியம் செய்யவென தருவிக்கப்பட்டவர் டானியல் பூவர் என்ற அமெரிக்கர். அவரது வாழ்வும் பணிகளும் இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பெற்றதாயும் பிறந்த பொன் நாடும், டானியல் பூவர் யாழ்ப்பாணம் வரல், தெல்லிப்பளையிற் கல்விப்பணி, டானியல் பூவர் அமைத்த பல்கலைக்கழகக் கல்லூரி, மதுரையில் ஆறு வருடங்கள், எழுத்தாளர் டானியல் பூவர், வாழ்விலும் தாழ்விலும் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.