சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம். யாழ்ப்பாணம்: அகிலம் வெளியீடு, 7, இரத்தினம் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).
ix, 163 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
வேலணை கிழக்கு சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் ஆசிரியர், அதிபர், சமூக சேவையாளர், கவிஞர், பேச்சாளர் எனப் பல்பரிமாணங்களைக் கொண்டவர். வாழ்வுச் சுவடுகள் இவரது சுயசரிதையாகும். ஒரு நூற்றாண்டுகாலத் தமிழ் சமூகத்தின் குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தை இவரது சுயசரிதை, வேலணை மண்ணின் வரலாற்றுடன் இணைத்து வழங்குகின்றது. ஏடு தொடக்கல், விளையாட்டு, பனம் பிரயோசனம், சவாரி, பட்டாணி, அரசியல் பிரவேசம், வேலணைகிராமச் சங்கம், தில்லுமுல்லு, மத்திய மகா வித்தியாலயம், கூட்டுறவு, கல்மடுக் கமம், சனசமூக நிலையங்களின் சமாசம், கோவில் பரிபாலனசபை, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பிரசைகள் குழு, வைத்தியம், மாந்திரீகம், விவசாயம், ஆன்மீகம், சமாதான நீதவான், கவிதை, கால்நடைகள், பயணங்கள், அவலங்கள், இடப்பெயர்வுகள், மீளக் குடியமர்வு ஆகிய 26 தலைப்புகளின்கீழ் இவரது வாழ்வனுபவங்கள் பேசப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 221487).