10923 விபுலானந்த அடிகள்.

மு.கணபதிப்பிள்ளை (மூலம்), மு.திருநாவுக்கரசு (தொகுப்பாசிரியர்). மதுரை: இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன், பிரசுரகர்த்தர், 1வது பதிப்பு, 1951. (மதுரை 51: எக்செல்ஷியர் பவர் பிரஸ்).

(2), 145 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5 சமீ.

இலங்கைக் கல்விப்பகுதி மொழிபெயர்ப்பாளர் திரு. மு.கணபதிப்பிள்ளை அவர்கள்  எழுதியிருந்த கட்டுரையைத் தழுவி சுவாமிகளின் குறிப்புகளைத் துணையாகக் கொண்டு தென் புலோலியூர் திரு. மு.திருநாவுக்கரசு அவர்களால் தொகுக்கப்பட்ட நூல். பிறப்பும் பதவியும், சென்னை வாழ்க்கை, இலங்கைமீட்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சொற்பணி புரிதல், பிரபுத்த பாரத ஆசிரியர், தென்னாடு திரும்புதல், யாழ்.நூல் அரங்கேற்றம், அடிகளார் பெரும்பிரிவு, அடிகளார் இயற்றிய கவிதைகளுட் சில, இரங்கற் பாக்கள் ஆகிய 11 அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86783).     

ஏனைய பதிவுகள்

15091 இந்து சமயம்: சிந்தையும் செயலும்.

கௌ.சித்தாந்தன். ஏழாலை: கௌ.சித்தாந்தன், சந்நிதி, சிவகுரு வீதி, ஏழாலை கிழக்கு, 1வது பதிப்பு, ஜீலை 2021. (ஏழாலை: தேவராசா தேவஜெகன், அக்ஷதா அச்சகம்). xviii, 185 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20×14