10926 வீரமாமுனிவர்: கத்தோலிக்க இலக்கியங்கள்.

திருமறைக் கலாமன்றம். யாழ்ப்பாணம்: இலக்கிய அவை, திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கத்தோலிக்க மறைத் தூதுவர் வீரமாமுனிவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. அன்னாரைப்பற்றித் தமிழ் உலகம் நன்கறியவேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு, தமிழறிஞர்களால் எழுதப்பட்டு கலைக்கண், வீரகேசரி, பாதுகாவலன், தொண்டன், மெசெஞ்சர் ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த வீரமாமுனிவரின் வாழ்வும் பணிகளும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 110397).     

ஏனைய பதிவுகள்

12413 – சிந்தனை தொகுதி XIV, இதழ் 2 (ஜுலை 2004).

கார்த்திகேசு குகபாலன் (இதழாசிரியர்), சோ.கிருஷ்ணராசா (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 129 பக்கம்,