பத்தினியம்மா திலகநாயகம் போல். யாழ்ப்பாணம்: பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).
x, 158 பக்கம், தகடுகள், விலை: ரூபா 600., அளவு: 24.5×19 சமீ.
எல் திலகநாயகம் போல் அவர்கள் பற்றி வாழ்வும் பணிகளும் பற்றிப் பேசும் நூல் இது. இலங்கையில் கர்நாடக சங்கீதத் துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய முதனிலை–முன்னணிப் பாடகர்கள் ஒருசிலரே உள்ளனர். இத்தகைமையையுடைய சிலருள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராக இருந்து மறைந்தவர் சங்கீதபூஷணம் அமரர் எல்.திலகநாயகம் போல் அவர்கள். இவர் இசையாளர் மட்டுமல்ல. நாடறிந்த இசைஞர். கலைஞர், கவிஞர், விமர்சகர், மேடைப் பேச்சாளர், ஆய்வுநர், இசையமைப்பாளர், தானே யாத்த பல பாடல்களை இசையமைத்துப் பாடுவதுடன் சிறந்த உதைபந்தாட்ட வீரரும்கூட. 1992இல் வீரமணி ஐயர் அவர்களால் அவருக்கு ‘ஸ்வர ராக லய வினோத சுரபி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.