என்.ஸ்ரீகெங்காதரன், மு.நித்தியானந்தன், இ.பத்மநாப ஐயர், கே.கிருஷ்ணராஜா (தொகுப்பாளர்கள்). ஐக்கிய இராச்சியம்: தவில்மேதை தட்சணாமூர்த்தி நிறுவனம், The Thavil Legend Thedchanamoorthy Foundation, 67, Hazelmere Close, Northolt, Middlesex UB5 6UB, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (London: RS Printers Ltd, 88, Horsenden Lane North, Greenford, UB6 7QH).
184 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17.5 சமீ.
லயஞான குபேர பூபதி, யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் வாழ்வையும் பணியையும் சிறப்பிக்கும் இந்நூலில் அவரைப்பற்றி இதுநாள்வரை வெளிவந்துள்ள கட்டுரைகளும் நறுக்குகளும் தரப்பட்டுள்ளன. கர்நாடக இசையுலகின் விமர்சகப் பிதாமகர்களான சுப்புடு, பி.எம்.சுந்தரம் ஆகியோரின் சிறப்புக் கட்டுரைகள், அவற்றில் அடங்கியுள்ளன. அவை தவிர, இந்நூலுக்கென்றே பிரத்தியேகமாக எழுதப்பட்ட கட்டுரைகளும் சமீபகாலமாக அவர்பற்றி ஆங்கிலம் மற்றும் தமிழ்ச் செய்தி ஊடகங்களில் பிரசுரமானவையும் அவற்றின் தற்காலப் பொருத்தம் கருதி இதில் சேர்க்கப்பட்டுள்ளன. தெட்சணாமூர்த்தியால் எழுதப்பட்ட ஒரேயொரு கட்டுரை என்று பரவலாக அறியப்படும், நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் குறித்த அவரது அஞ்சலியும் இதில் இடம்பெற்றுள்ளது.