10929 காலம் கடந்தும் வாழும் கலைஞன்.

மலர்க் குழு. பண்ணாகம்: அமரர் இரத்தினசிங்கம் கிருஷ்ணதுரை குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2015. (யாழ்ப்பாணம்: திருமொழி அச்சகம், சங்கானை).

100 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பண்ணாகத்தில் பிரபல அண்ணாவியாராக இருந்து கலைச்சேவை புரிந்தவர் கலைவாரிதி, கலாபூஷணம் இரத்தினசிங்கம் கிருஷ்ணதுரை (22.09.1944-08.04.2015) அவர்கள். ஸ்ரீ அம்பாள் நாடக மன்றத்தின் செயலாளராகவிருந்து 52 நாடகங்கள் வரை எழுதியும், முக்கிய பாகங்களில் நடித்தும் வந்தவர். சங்கானை, பண்டத்தரிப்பு, மாதகல், மானிப்பாய், நாரந்தனை போன்ற இடங்களில் இவை மேடையேற்றம் கண்டிருந்தன. சங்கானை ப.நோ.கூ.சங்க மின்தறியாலையின் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றியவர். அவரது மறைவையொட்டி அன்னாரின் குடும்பத்தினரால் தொகுக்கப்பட்ட அமரர் கிருஷ்ணதுரையின் வாழ்வும் பணிகளும் பற்றிய மனப்பதிவுகள் இவை.

ஏனைய பதிவுகள்