த.கோபாலகிருஷ்ணன் (புனைபெயர்: செங்கதிரோன்). காரைதீவு (கிழக்கு மாகாணம்): எஸ்.வி.கமலநாதன், ஸ்தாபகர், சமர்த்தர்கள் ஞாபகார்த்தச் சமூக ஊக்குவிப்புச் சம்மேளனம், 1வது பதிப்பு, 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
ii, 152 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
மட்டக்களப்பின் தமிழறிஞர் அமரர் மயில்வாகனம் சற்குணம் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய மதிப்பீடாக இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளது, சமத்தர்கள் சம்மேளனக் கீதம், ஆசியுரை, சம்மேளன ஸ்தாபகர் உரை, ஓம் ஸ்ரீ சாயிராம் ஆகிய முன்னுரைக் குறிப்புகளுடன் சமுதாயத்தில் மனித மேம்பாடுகளைக் காணத்துடித்தவன் சற்குணம், நான் கண்ட தமிழறிஞர், சற்குணச் சான்றோன், தமிழ் அறிஞருக்குள் ஒரு கூத்துக் கலைஞன், வண்ணத்தமிழ் யாசகன் (கவிதை), நிகழ்ந்தவைகளின் நினைவில், தமிழறிஞர் அமரர் ம.சற்குணம், செயல்நாயகன் அமரர் ம.சற்குணம், நற்சிந்தனையாளர் நம் சற்குணம், மயில்வாகனம் சற்குணம் அவர்கள் ஒரு சகாப்தத்தின் பதிவு, அமரர் ம.சற்குணம் அவர்கள் பற்றிய சில நினைவுத் துளிகள், சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர் திருவாளர் எம் சற்குணம், நண்பர் சற்குணம் என்னிடம் விதைத்த சில நினைவுகள், சற்குணத்தார் நாமம் வாழி (கவிதை), மணம் மிகு மனிதன், நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன் ஆகிய 20 தலைப்புகளில் பல்வேறு பிரமுகர்களின் ஆக்கங்கள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51345).