10932 சிகரம் தொட்ட செம்மல்: வி.பி.கணேசன்.

மொழிவாணன். கொழும்பு 13: நீரஜா பப்ளிக்கேஷன் வெளியீடு, 104/36, சங்கமித்த மாவத்தை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

114 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-0231-03-4.

தொழிற்சங்கவாதியாக, வர்த்தகராக, திரைப்படக் கலைஞராக வாழ்ந்த மறைந்த வைத்திலிங்கம் பழநிச்சாமி கணேசன் பற்றிய வாழ்க்கை வரலாறு  நூலாக்கம் பெற்றுள்ளது. தனது தந்தையின் வழியில் தொழிற்சங்கவாதியாக வாழ்ந்ததுடன், புதிய காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க ஆகிய தமிழ்ப் படங்களையும் சுபானி, அஞ்சனா ஆகிய சிங்களத் திரைப்படங்களையும் தயாரித்த இவர், ஈழத்துத் திரைப்படத்துறையிலும், மலையகத் தொழிற்சங்க வரலாற்றிலும், வர்த்தகத் துறையிலும்  சிறப்பாகப் பேசப்பட்டவர். அவரது குடும்ப அங்கத்தவர்களின் துணையுடன், தகவல்களைப் பெற்று விறுவிறுப்பான நாவலைப் போன்று இவ்வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்