10933 இரும்பரசன் புறொபசர் சாண்டோ சங்கரதாஸ் அவர்களின் 93ஆவது பிறந்த தின நினைவு மலர்.

சாண்டோ வே.ஸ்ரீதாஸ் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சாண்டோ வே.ஸ்ரீதாஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை)

24 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

மட்டக்களப்பைச் சேர்ந்த சாண்டோ சங்கரதாஸ் அவர்களின் பிரதம சீடர்களுள் ஒருவரான இரும்பு மனிதன் என்ற பட்டப்பெயரைக் கொண்டவரான சாண்டோ வே.ஸ்ரீதாஸ் அவர்கள் தனது குருவின் மறைவின் 27ஆவது ஆண்டு நினைவுதினமான 26.04.1996 அன்று அவரைப் பற்றிய மனப்பதிவுகளையும் புகைப்படங்களையும் ஆவணமாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.  இரும்பரசன் சாண்டோ சங்கரதாஸ் 05.02.1903 இல் பிறந்து 26.04.1969 இல் மறைந்தவர். 1931ம் ஆண்டு அன்றைய தேசாதிபதியாக விருந்த சேர். ஸ்டான்லி அவர்களால் Iron King of Ceylon என்ற பாராட்டைப் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

14470 சித்த மருத்துவம் 1990/91.

என்.ஸ்ரீசுப்பிரமணியம் (இதழாசிரியர்), க.ஸ்ரீதரன் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). xviii, 64 பக்கம், தகடு, விலை: