ஓ.கே.குணநாதன் (மலராசிரியர்). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2014. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி).
575 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-8715-96-3.
தமிழறிஞர் திரு. அகளங்கன் (நா.தர்மராஜா) அவர்களின் மணிவிழாவையொட்டி வெளியிடப்பெற்ற மலர் இது. ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் என்பனவற்றுடன், அகளங்கனின் வாழ்வும் பணிகளும் பற்றியதான 33 விரிவான கட்டுரைகளையும், அவர் பற்றிப் பல்வேறு கவிஞர்கள் யாத்த 21 கவிதைகளையும், 10 நூலாய்வுகளையும், அவர் பங்கேற்று உரையாற்றிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளையும் இந்நூல் உள்ளடக்குகின்றது.