10936 இலக்கிய வித்தகர் அநு.வை.நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணிகள்.

கலை இலக்கியக்களம். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, மே 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).

32 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

அநு.வை.நாகராஜன் கல்வித்துறையில் ஆசிரியராக, அதிபராக, கல்வி அதிகாரியாகத் தடம் பதித்தவர். சம காலத்தில் இலக்கிய உலகில் தலைசிறந்த ஆக்க இலக்கியகர்த்தாவாய், கவிஞராய், பேச்சாளராய்த் திகழ்ந்தவர். 15க்கும் அதிகமான நூல்களை தமிழுலகிற்கு வழங்கியவர். தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களத்தின் (1986) நிறுவுநர்களில் முக்கியமான ஒருவர். ஆரம்பகாலத்திலிருந்து பல ஆண்டுகள் தொடர்ந்து பொருளாளராகவிருந்து அரும்பணியாற்றியவர். அவரது பவளவிழாவின்போது அவரின் இலக்கியப் பணிகள் பற்றிய ஐந்தொகையாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. தெல்லிப்பழை கலை இலக்கியக்களம், தமது பணியாளர்களை வாழும்போதே கௌரவித்து மகிழும் பாரம்பரியத்தைக் கொண்டது. மாவை. பண்டிதர் க.சச்சிதானந்தன், கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை போன்றோரின் இலக்கிய முயற்சிகளை பதிவுசெய்தது போன்றே அநு.வை.நாகராஜன் அவர்களது பணிகளையும் விதந்துபோற்றி இந்நூலில் கௌரவித்திருக்கிறது.

ஏனைய பதிவுகள்

Better Slots Web sites 2024

Articles Try Bitcoin Slot Websites As well as Legal? Make use of the Available on the internet Resources How to Claim Online casino No-deposit Bonus