10937 இலக்கியப் பூக்கள்-2.

முல்லை அமுதன். (இயற்பெயர்: இ.மகேந்திரன், தொகுப்பாசிரியர்). லண்டன்: காற்றுவெளி, 34 Redriffe Road, Plaistow E13 0JX, 1வது பதிப்பு, மாசி, 2015. (சென்னை 600002: காந்தளகம், 68 அண்ணா சாலை).

372-916 பக்கம், விலை: இந்திய ரூபா 990., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-81-897-0855-9.

லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர் முல்லை அமுதன், ஈழத்துத் தமிழ் நூல்களைச் சேகரித்து லண்டனில் கண்காட்சிகளையும், மறைந்த எழுத்தாளர்கள் பற்றிய காட்சிப்படுத்தல்களையும் தொடர்ந்து மேற்கொண்டுவருபவர். அமரத்துவமடைந்த ஈழத்து எழுத்தாளர்களின் வாழ்வும் பணியும் பற்றிப் பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய 44 கட்டுரைகளைத் தொகுத்து இலக்கியப் பூக்களின் முதலாவது தொகுதியை நூலுருவாக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக வெளிவரும் இந்நூலில் அமரத்துவமடைந்த மேலும் 56 எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகளும் இப்பாரிய தொகுப்பில் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன. இருபாலைச் சேனாதிராய முதலியார், ஆறுமுக நாவலர், உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், சீ.வை.தாமோதரம்பிள்ளை, சபாபதி நாவலர், செந்திநாதையர், கல்லடி வேலுப்பிள்ளை, நா.கதிரவேற்பிள்ளை, ஆனந்தக் குமாரசாமி, ஆ.வேலுப்பிள்ளை உபாத்தியாயர், நவாலியூர் சோமசுந்தரம்பிள்ளை, மு.நல்லதம்பி, பண்டிதை இ.பத்மாசனி அம்மாள், சைவப்புலவர் சி.வல்லிபுரம், அண்ணாவியார் பக்கிரி சின்னத்துரை, இளமுருகனார், நமசிவாயத்தார், வண.தனிநாயகம் அடிகள், கோவைக்கிழார் க.இ.குமாரசாமி, பண்டிதர் மு.ஆறுமுகனார், வேந்தனார், ஆரையூர் நல்.அளகேச முதலியார், தம்பலகாமம் க.வேலாயுதம், அமுதுப்பலவர், க.சச்சிதானந்தன், ஈழமேகம் பக்கீர்தம்பி, தேவன்-யாழ்ப்பாணம், தி.ச.வரதராசன், தமிழருவி சண்முகசுந்தரம், வ.அ.இராசரத்தினம், அருள் செல்வநாயகம், அகஸ்தியர், ஆரையூர் அமரன், கே.டானியல், டாக்டர் நந்தி, அ.கூ.பொன்னத்துரை, எஸ்.டி.சிவநாயகம், இளவாலை ஜேசுரத்தினம், கவிஞர் நீலாவணன், க.கைலாசபதி, கவிஞர் தா.இராமலிங்கம், அநு.வை.நாகராஜன், அண்ணாவியார் சாமிநாதன், பவளசுந்தரம்மா, ஏ.ஜே.கனகரத்தினா, கவிஞர் இ.முருகையன், ஈழவாணன், சண்முகம் சிவலிங்கம், காரை.செ.சுந்தரம்பிள்ளை, கவிஞர் எஸ்.எல்.ஏ. லத்தீப், ஆலங்கேணி இரட்டையர் க.தங்கராசா- கு.கோணாமலை, சிலோன் விஜயேந்திரன், நாவண்ணன், தெ.நித்தியகீர்த்தி, டானியல் அன்ரனி,  என மறைந்த ஈழத்தவர்கள் 56 பேரை இந்நூலில் பல்வேறு எழுத்தாளர்கள் நினைவூட்டியிருக்கின்றார்கள்.

ஏனைய பதிவுகள்