மலர்க் குழு. தர்கா நகர்: தர்கா நகர் படிப்பு வட்டம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (பேருவளை: பொசிட்டிவ் கிராப்பிக்ஸ், 63, பள்ளிவாசல் வீதி).
(34), 158 பக்கம், புகைப்படங்கள், 32 தகடுகள், விலை: ரூபா 750., அளவு: 25×19 சமீ., ISBN: 978-955-967352-1.
கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றை பிறந்தகமாகவும், தர்காநகரை புகுந்தகமாகவும் கொண்டவர். தர்காநகரில் கவிஞர் இக்பால் 28.10.1972இல் உருவாக்கிய படிப்புவட்டம் அவரது ஐம்பதாண்டு இலக்கியப்பணியை பதிவுசெய்யும் வகையில் உருவாக்கியுள்ள ஆவணம் இதுவாகும். கவிஞர் ஏ.இக்பால் அவர்கள் கவிதை, சிறுகதை, விமர்சனம், இலக்கிய ஆய்வுகள், வரலாறு, கல்வி என்பன தொடர்பாக 12 நூல்கள் வரை வெளியிட்டவர். எண்ணற்ற விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். இவரைப்பற்றிய மனப்பதிவுகளை 34 எழுத்தாளர்கள் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55478).