க.தா.செல்வராசகோபால் (மூலம்), எட்வேட் இதயச் சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல.3, 1292, Sherwood Mills BLVD, Mississauga, L5V 1S6, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஆவணி 2005. (ரொரன்ரோ: றி கொப்பி).
103 பக்கம், புகைப்படம், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21.5×14 சமீ.
இந்நூலில் இலங்கை அரசு அளித்த கௌரவமும் மக்கள் அளித்த சீருஞ் சிலையும் (தேசிய வீரர்களில் புலவர்மணி, சிலைபெற்ற செம்மல்), வாழ்க்கைத் தகவல் குறிப்புகள் (வாழ்ந்த காலக் குறிப்புகள், அமரரான பின் நடந்த குறிப்புகள்), புலவர்மணி நமக்கு அளித்துச் சென்றுள்ள தமிழ்ச் செல்வங்கள் (புலவர்மணியின் ஆக்கங்கள், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள், மலர்களை அழகுசெய்த படைப்புகள், புலவர்மணியின் வாழ்க்கை நூல்கள், இலங்கை வானொலியில் புலவர்மணி), புலவர்மணி அவர்களின் வாழ்க்கை (வரலாற்று வெண்பா), புகழ்பூத்த புலவர்மணி அவர்களை அறிந்துகொள்ளுங்கள் (கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் புலவர்மணியின் குடும்பத் தொடர்புகள், சமூக சட்டவமைப்பு சார்ந்த சேவைகள், புத்தூக்கந் தந்த புலவர்மணி, சமரசம் பேணிக் காத்த சங்கத் தமிழன், ஆங்கிலக் கட்டுரைகள், புலவர்மணி ஒரு பூந்தமிழ்ப் பாவலன்) ஆகிய அத்தியாயங்களின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37025).