10942 கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்: ஒரு மனிதநேயரின் கதை.

என்.செல்வராஜா. லண்டன் நு11 3துஓ: தேசம் வெளியீட்டகம், தபால் பெட்டி எண்: 35806, வோல்த்தம்ஸ்ரோ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 151 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-9930143-4-5.

ஒரு உடன்பிறவாத சகோதரனின் அறிமுகம், புன்னியாமீனும் சிந்தனை வட்டமும், ஈழத்துத் தமிழ் நூலியல் வரலாற்றில் சிந்தனை வட்ட வெளியீடுகள், புன்னியாமீனும் அவரது ஆவணவாக்கல் பணிகளும், நூல்தேட்டத் தொகுப்பு மற்றும் நூல்வெளியீடுகளில் புன்னியாமீனின் பங்களிப்பு, புன்னியாமீனின் உதவியுடன் இலங்கையில் புத்தக விநியோகம், புன்னியாமீன்-லண்டன் உறவுப்பாலம், புன்னியாமீன் எழுதிய நூல்கள் ஒரு நூல்விபரப் பட்டியல் ஆகிய எட்டு அத்தியாயங்களில் அமரர் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் (11.11.1960- 10.03.2016) பற்றிய வாழ்வும் பணிகளும் இந்நூலில் பதிவுக்குள்ளாகியுள்ளன. 

ஏனைய பதிவுகள்