10946 நல்லைநகர் நாவலர் பெருமான் வழியில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.

குமாரசாமி சோமசுந்தரம். கொழும்பு: சைவத் திரு கா.சிவபாலன், 1வது பதிப்பு, மார்ச் 2015. (கொழும்பு 13: கு.அருளானந்தம், அனுஷ் பிரின்டர்ஸ்).

xii, 109 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ.

இந்நூல் சைவப் பெரியார் கலாபூஷணம் குமாரசாமி சோமசுந்தரம் அவர்களின் பத்து கட்டுரைகளை உள்ளடக்கியது.  நாவலர் ஞானபரம்பரையைத் தொடரவைத்த பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி.கணபதிப்பிள்ளை, பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி.கணபதிப்பிள்ளை-வாழ்வும் வளமும்,  ஈழத்துத் தமிழ்க் கல்வி வழியில் பண்டிதமணி, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை தரும்மனித விழுமியச் சிந்தனைகள், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் இளமைக்கால அனுபவங்கள், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை-ஆளுமை வளர்ச்சி, நாவலருக்குப் பின் நமக்கொரு சைவக்காவலர் பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி.கணபதிப்பிள்ளை, பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி.கணபதிப்பிள்ளை, நாவலர் வழியில் பண்டிதமணி போற்றிய கந்தபுராண கலாசாரம்: ஒரு கண்ணோட்டம், Pandithamani Dr. S.Kanapathippillai (1899-1986) ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் பல்வேறு ஊடகங்களிலும் அவ்வப்போது பிரசுரமானவை. கலாபூஷணம் குமாரசாமி சோமசுந்தரம் தென்மராட்சி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்விப் பெரும் புலத்தில் ஆசிரியராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, கல்விப் பணிப்பாளராக, தேசிய கல்வி நிறுவக பிரதிக் கல்விப் பணிப்பாளர்நாயகமாக கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்றவர். (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24936). 

ஏனைய பதிவுகள்

16314 அனர்த்தங்களும் மனித விலங்கு நடத்தைகளும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×15.5 சமீ.,