10948 வரகவி ஃபிரான்சிஸ் யோசஃப் தொம்ஸன்.

ஜுலியஸ் ஜே. இராசையா. மன்னார்: ஜுலியஸ் ஜே. இராசையா, புனித செபஸ்தியார் ஒழுங்கை, 1வது பதிப்பு, மாசி 1982. (கொழும்பு 12: சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்).

xvii, (2), 47 பக்கம், தகடு, விலை: ரூபா 12.50, அளவு: 20.5×14 சமீ.

ஃபிரான்சிஸ் யோசஃப் தொம்ஸன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர். அவரது வாழ்க்கை வரலாற்றை தமிழ் வாசகருக்கு அறிமுகப்படுத்துவதுடன், அவரது அமரத்துவமான படைப்பான ர்ழரனெ ழக ர்நயஎநn என்ற கவிதையை ‘சளைக்காத இறை அன்பு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துமிருக்கிறார். ஃபிரான்சிஸ் யோசஃப் தொம்ஸனின் வரலாறு, சளைக்காத இறை அன்பு,  ஃபிரான்சிஸ் தொம்சனின் இலக்கியப் புலமை ஆகிய மூன்று அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. நூலாசிரியர் புனித பிரான்சிஸ்கு சபையின் தலைவராகப் பணிபுரிந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 82401).     

ஏனைய பதிவுகள்