ஹெல்மட் ஆண்ட்ஸ் (மூலம்), எப்.எக்ஸ்.சி. நடராசா (தமிழாக்கம்). கொழும்பு 7: ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசு தூதரகம், ஜேர்மன் கலாசார நிலையம், 59, அலக்ஸாண்டரா பிளேஸ், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: அசோசியேட்ஸ் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டெட், லேக் ஹவுஸ்).
93 பக்கம், வண்ணத் தகடுகள், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
பின்னணி, அரசியற் கொள்கை, பொருளாதாரம், சமூகவியல், கலாசாரம் ஆகிய ஐந்து பெரும்பிரிவுகளின் கீழ் 38 அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஜேர்மனிய றீச், கூட்டாட்சி ஜேர்மன் குடியரசும் பேர்லின் மாநகரமும், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு, ஜேர்மனிய றீச்சின் கிழக்குப் பிரதேசம், நிலம் சுவாத்தியம், சுரங்கப் பொருள் வளம், நிலப்பரப்பும் குடிசனமும் ஆகிய 6 இயல்கள் பின்னணி என்ற முதற் பிரிவில் இடம்பெறுகின்றன. அரசியற் கொள்கை என்ற இரண்டாம் பிரிவில் சட்டமும் அரசாங்கமும், ஆட்சிச் சபைகள்: புந்து, இலந்தர், கொம்யூன், வெளிநாட்டுக் கொள்கை, பொது மக்கள் அபிப்பிராயம் ஆகிய 4 இயல்கள் இடம்பெறுகின்றன. பொருளாதாரம் என்ற பிரிவின்கீழ் உள்ள 13 இயல்களில் சிறப்புத் தொழில்கள், தேசிய வருவாய், மக்களின் நுகர்ச்சித் தேவை, உணவும் விவசாயமும், கைத்தொழில்-மின்சார உற்பத்தி, கைவேலைகள், கட்டுமானப்பணிகள், வாகனப் போக்குவரத்து, சுற்றுப்பிரயாணம், அரசாங்க நிர்வாகம், வரி, நாணயமும் பெறுமானமும், வெளிநாட்டு வர்த்தகம், சந்தைகள், பொருட்காட்சிசாலைகள் என பல்வேறு பொருளியல்சார் விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. சமூகவியல் பிரிவில் 8 தலைப்புகளின் கீழ் சமூக அமைப்பு, முதலாளியும் தொழிலாளியும், சேவைநலம், பொதுச் சுகாதாரம், தொழில்பாதுகாப்புச் சட்டங்கள், பெண்களின் நிலை, இளைஞர்கள், சமயமும் தேவாலயங்களும் சட்டம் ஆகிய விடயங்கள் பேசப்படுகின்றன. இறுதிப்பிரிவான கலாச்சாரம் என்ற பிரிவில் 7 இயல்களிலும் கலாச்சார வாழ்க்கை, கல்வி, கலைகள், இலக்கியம், ஓவியம், இசையும் அரங்கும், வானொலி, சினிமா, தொலைக்காட்சி ஆகியன பற்றிப் விளக்கப்படுகின்றன. இறுதியில் வரலாற்று நிகழ்ச்சிகளின் அட்டவணை ஒன்றும் காணப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91114).