க.குணராசா (புனைபெயர்: செங்கை ஆழியான்). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10V, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
iv, 172 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-1624-05-07.
ஈழத்தின் புனைகதைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கும் இந்நூலாசிரியர் இலங்கை வரலாற்றுத் துறையிலும் தனது கவனத்தைச் செலுத்துபவர். ஈழத்தின் வரலாற்றுக் கூறுகளை ஜனரஞ்சக நாவல்களாகத் தந்தவர். ஏற்கெனவே மகாவம்சம் கூறும் இலங்கை வரலாற்றை நூலுருவில் வழங்கியவர். மூலநூல்களின் நம்பகத்தன்மையை புரிந்துகொள்ளவும் அவற்றின் செய்திகளைப் புரிந்துகொள்ளவும் இந்நூல் உதவுகின்றது. மகா பராக்கிரமபாகுவை பாட்டுடைத் தலைவனாகக் கொள்வது சூளவம்சம். இந்நூல் சூளவம்சத்தின் ஆரம்ப மன்னர்கள், தாதுசேனனும் காசியப்பனும், அக்கபோதி மன்னர்கள், மானவர்மன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், சோழமன்னன் வல்லபன், விஜயபாகு, பராக்கிரமபாகுவின் பிறப்பு, பராக்கிரமபாகுவின் திக்விஜயம், பராக்கிரமபாகுவின் அரண்மனை வாழ்வு, மகா பராக்கிரமபாகு, இலங்காபுரத் தண்டநாயக்கன், பராக்கிரமபாகுவின் பின்னர், கலிங்க மாகன், சந்திரபானு, மூன்றாவது பராக்கிரமபாகு, மூன்று மன்னர்கள், கீர்த்திஸ்ரீ ராஜசிங்கன் ஆகிய 18 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.