ஆர்.என்.லோகேந்திரலிங்கம். கனடா: கனடா உதயன் வெளியீடு, 1வது பதிப்பு, 2013. (கனடா: ஜே.ஜே.பிரின்ட், டொரன்டோ).
332 பக்கம், புகைப்படங்கள், விலை: கனெடியன் டொலர் 15., அளவு: 21.5×14 சமீ.
கனடா உதயன் பத்திரிகையில் அதன் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம், நாலாம் கட்ட ஈழப்போரின்போதும் அதன் பின்னரும் எமது ஈழத்துத் தமிழ் அரசியல் நிலைமைகளைப் படம்பிடித்துக்காட்டுவதாக அமையும் வகையில் கதிரோட்டம் என்ற தலைப்பில் அவ்வப்போது பத்தாண்டுகளாக எழுதி வெளியிட்ட ஆசிரியர் தலையங்கங்களின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும். 5.3.2004 தொடங்கி 5.7.2013 வரையிலான பத்தாண்டுகளின் ஈழத்து அரசியல் பதிவாக இவை அமைகின்றன. ஒட்டுமொத்த தமிழ் மக்கள் குறித்து மாத்திரமல்ல,அவர்களது சுய கௌரவம், பாதுகாப்பு, மனித உரிமைகள், தமிழ்த் தேசியம், ஒற்றுமை எனப் பல தளங்களிலிருந்து இவை எழுதப்பட்டுள்ளன.