நிராஜ் டேவிட். சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, 6ஆவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
319 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ.
அவலங்களின் அத்தியாயங்கள் என்னும் இப்பதிவு ஈழத்தமிழரின் வாழ்வியலில் அவர்கள் எதிர்கொண்ட பலபரிமாண அவலங்களின் ஒரு குறுகிய பகுதியை மீட்டுப்பார்க்கும் ஒரு சிறு முயற்சியாகும். இந்தியா, இந்தியப்படை, இலங்கை இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளின் போராட்டம் இப்படியான ஒரு காலச் சுழலுக்குள் அகப்பட்ட ஈழத்தமிழர்கள், அந்தச் சூழலில் சந்தித்த அவலங்களின் ஒரு சில பதிவுகளைத்தான் இந்த நூலில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57463).