பஷீர் சேகுதாவூத். திருச்சி மாவட்டம்: விளிம்பு வெளியீடு, 1205, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, 2013. (திருச்சி: அடையாளம் பிரஸ்).
xix, 211 பக்கம், விலை: ரூபா 600., இந்திய ரூபா 250., அளவு: 22×14 சமீ., ISBN: 978-81-908552-0-4.
உற்பத்தித் திறன் அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவுத் 1991ஆம் ஆண்டு முதல் 2011 வரை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் முக்கியமான 36 உரைகளின் தொகுப்பு. பஷீர் சேகுதாவுத் ஈரோஸ் இயக்கத்தின் மேனாள் உயர்நிலை உறுப்பினர். 1989ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு ஈரோஸ் அமைப்பின் சார்பாக சுயேட்சை உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டவர். அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராகி, ஐக்கிய தேசிய கட்சி அரசில் வீட்டு வசதித்துறையின் துணை அமைச்சரானவர். 2004ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார். பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்துக்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியில் இணைந்து அந்த அரசின் உள்ளுராட்சித்துறையின் அமைச்சரவையற்ற அமைச்சரானார். 2008இல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, அச்சபையின் எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பிறகு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2013 ஜனவரி மாதத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசின் உற்பத்தித் திறன் ஊக்கவிப்புத் துறை அமைச்சராகத் தம் பணியைத் தொடந்தார். இப்பின்னணியில் நின்று வாசிக்கப்படவேண்டிய இவ்வுரைகள் ஒருபுறம் இலங்கை அரசின் புறக்கணிப்பு, மறுபுறம் ஈழ விடுதலைப் போராளிகளின் வன்முறைக்கு முகம் கொடுத்தல் என இருமுனைத் தாக்குதல்களில் சிக்கிச் சின்னாபின்னமாகித் தங்கள் உடைமை, உரிமை அனைத்தையும் இழந்து ஏதிலிகளாக நிற்கும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களின் நிர்க்கதி பற்றி இவ்வுரைகள் பேசுகின்றன.