10958 தரிசனம்: வீரகேசரி நாளிதழ் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கங்கள்.

ஆர்.பிரபாகரன். கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்;பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

(30), 368 பக்கம், கருத்தோவியங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0811-03-8.

திரு. ஆர். பிரபாகரன் 1988இல் ஊடகவியலாளராக வீரகேசரி நிறுவனத்தில் இணைந்து செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர். கடந்த ஏழாண்டுகளாக வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் அவர் எழுதியஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பு இதுவாகும். மொத்தம் 140 தலையங்கங்கள் இதில் தேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. 6.1.2007 முதல் 24.7.2012 வரையிலான காலகட்ட அரசியல் சமூக கருத்தோட்டங்களை ஆழமான பார்வையுடன் இத்தலையங்கங்கள் பிரதிபலிக்கின்றன.

ஏனைய பதிவுகள்