வீ.ஆனந்தசங்கரி. கிளிநொச்சி: வீ.அனந்தசங்கரி, செயலாளர் நாயகம், தமிழர் விடுதலைக் கூட்டணி, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம், கனகபுரம் வீதி).
76 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இதுவரை காலமும் தன்மீது சுமத்தப்பட்ட உண்மைக்குப் புறம்பான திட்டமிட்டுத் திரிபு படுத்திய செய்திகளை பரப்புரை செய்து வந்தமையால் தான் அதனை ஆதாரபூர்வமாக இந்த நூலின் மூலம் மறுத்துள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தான் பேசிய விடயங்கள், பாராளுமன்ற ஹன்சார்ட்டில் இன்றும் எடுத்துப்பார்க்க முடியும் எனவும் எடுத்துக்காட்டி, அதுவே தனது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு ஆதாரம் எனவும் திரு. வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். முன்னுரை, எனது உள்ளத்திலிருந்து, அரசியல் பிரவேசம், தந்தை செல்வாவும் தலைவர் ஜீ.ஜீயும், தமிழர் விடுதலைக் கூட்டணி அங்குரார்ப்பணம், 1977 பாராளுமன்றத் தேர்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 2001, 2002, 2004 தேர்தல்களும், ஏகப் பிரதிநிதித்துவக் கோரிக்கை, தமிழரசுக் கட்சி புனரமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்குரார்ப்பணமும் தவறான வியாக்கியானமும், அரசியல் வியாபாரம், 2004ம் ஆண்டு தேர்தலில் நடந்தேறிய மோசடிகள், முறையற்ற நிதி சேகரிப்பு, த.தே.கூ. பற்றிய விமர்சனங்கள், மறக்கமுடியாத சில உண்மைகள், தந்தை செல்வாவின் பாசம், ஜீ.ஜீயின் பாசம், தலைமைக்கு மரியாதை, அமிர் பிரிவும் நியமன உறுப்பினர் தெரிவும், 1994ஆம் ஆண்டு தேசியப் பட்டியல், 2001ஆம் ஆண்டு தேர்தல், தமிழரசு காங்கிரஸ் ஒற்றுமை, அமிருக்கு ஏற்பட்ட அவமானங்கள், அஹிம்சைப் போராட்டம் தோற்கவில்லை ஆகிய பல்வேறு உப தலைப்புகளின்கீழ் தன் நினைவுப்பதிவுகளை இந்நூலில் இரைமீட்கின்றார்.