வீ.தனபாலசிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xx, 236 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-347-1.
ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற தலைப்பில் 2010இல் தினக்குரல் ஆசிரியர் எழுதிய 100 ஆசிரியத் தலையங்கங்கள் தொகுத்துத் தனி நூலுருவில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நூல் அதன் தொடர்ச்சியாக மேலும் தேர்ந்த 68 ஆசிரியத் தலையங்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. உள்நாட்டு அரசியலும் இனப்பிரச்சினையும், ஜனாதிபதி, உள்ளுர் அரசியல்வாதிகள், தமிழ்க் கட்சிகள், சர்வதேச அரசியல், சர்வதேச அரசியல் பிரமுகர்கள், ஊடகத்துறை, வேறு ஒப்பீடுகள் ஆகிய எட்டுப் பொதுப் பிரிவுகளின் கீழ் இத்தலையங்கக் கட்டுரைகள் பகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56144).