குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். தெல்லிப்பழை: குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க இலங்கைக் கிளை, தமிழகம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1979. (இலங்கை: அச்சக விபரம் தரப்படவில்லை)
(14), 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.
சென்னையில் இடம்பெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டின்போது தமிழகச் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணலின் எழுத்துவடிவம் இது. இறியூனியன் தீவைச் சேர்ந்த திரு.வீ.தேவகுமாரன் அவர்களை குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் விரிவாக நேர்காணல் ஒன்றின் வழியாக உலகத்தமிழர்களுடன் இணைத்திருக்கிறார். இறியுனியன் தீவில் குடியேறிய தமிழர்கள், அவர்களது சமூக வரலாறு, தற்போதைய நிலை, அங்கு தமிழ் வளர்ச்சிக்கான பணிகள் என்பனபோன்ற பல விடயங்களை இந்நேர்காணல் வாயிலாக பதிவுசெய்திருக்கிறார். கடல்களுக்கப்பால் தமிழர் என்ற தொடரில் வெளிவரும் மூன்றாவது சிறுநூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2731).