10965 ஈழத் தமிழர் தொன்மையும் வழக்காறுகளும்: கட்டுரைகளின் தொகுப்பு.

மயிலங்கூடலூர் பி.நடராசன் (ஆசிரியர்), சி.ஜெயசங்கர், சு.ஸ்ரீகுமரன், சி.ரமேஷ் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பரணி பதிப்பகம், கோண்டாவில், 1வது பதிப்பு, 2012. (மல்லாகம்: ராம்நெற்.கொம், காங்கேசன்துறை வீதி).

vi, 154 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

இழக்கப்படக்கூடாத ஒரு மரபுபற்றியும் மறக்கப்படக்கூடாத ஒரு மரபினர் பற்றியும் என்ற தலைப்பிலான முதலாவது கட்டுரை அறிந்துகொள்ளப்படவேண்டியதும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படவேண்டியதுமான செயல்மையப் புலமைத்துவ மரபொன்றினை அடையாளப்படுத்தும் முன்னுரையாகின்றது.  தொடர்ந்து, மயிலங்கூடலூர் பி.நடராசன் எழுதி ஊடகங்களில் அவ்வப்போது பிரசுரமான சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் வன்னிவளநாட்டின் வாய்மொழி இலக்கியச் செல்வம், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் மஹாகவி உருத்திரமூர்த்தியும், மழலைப்பாடல்கள், ஈழத்தமிழர் தொன்மை, பழந்தமிழர் திருமணம், பாரதியும் அறிவியலும், வன்னி நாட்டின் வழக்கு மொழிகள், அனைத்துலகத் தமிழியலாய்வின் தந்தை: தனிநாயகம், ஆகியவை ஆசிரியரால் எழுதப்பட்டவை. மயிலங்கூடலூர் பி.நடராசனுடன் நேர்காணல்: நேர்கண்டவர் இயல்வாணன், ஈழத்துத் தமிழிலக்கியப் புலத்தில் மயிலங்கூடலூர் நடராசன்: பார்வையும் பதிவும் ஆகிய இரண்டு பதிவுகளும் ஆசிரியர் பற்றிய மேலதிக தகவல்களை வழங்குகின்றன. இது பரணி பதிப்பகத்தின் முதலாவது பிரசுரம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 228118)

ஏனைய பதிவுகள்

14539 சின்னஞ்சிறிய பூக்கள்-5.

உதவி. நண்பர்கள் (தொகுப்பாசிரியர்கள்). ஜேர்மனி: Uthawi.Media, Postfach 1226, 59884, Eslohe,1வது பதிப்பு, நவம்பர் 2015. (கொழும்பு: Crescendoo Link). (4), 78 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. சின்னஞ்சிறிய

Prairie Band Local casino & Resort

Articles Read this: Satisfaction Community Tuesday: Saturday, July 22, 2024 Local casino Internet sites Such as Bitstarz Silverton Casino’s recently renovated resorts have an excellent