கந்தையா அருந்தவராசா. யாழ்ப்பாணம்: அஞ்சு வெளியீட்டகம், நல்லூர், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: அபி பதிப்பகம், நல்லூர்).
xiv, 133 பக்கம், படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-53561-3-8.
முஸ்லிம் மக்களது யாழ்ப்பாண வருகையும் அவர்களது ஆரம்பகாலக் குடியேற்றங்களும், போர்த்துக்கேயரது காலப்பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் (1505-1658), ஒல்லாந்தர்களது காலப்பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் (1658-1796), ஆங்கிலேயர்களது காலப்பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் (1796-1948), சுதந்திரத்தின் பின்பாக யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள், முஸ்லிம் மக்களது இடப்பெயர்வு, முஸ்லிம் மக்களின் யாழ்ப்பாண மீள்வருகை, இன்றைய யாழ்ப்பாண முஸ்லிம் மக்களது பொருளாதார நடவடிக்கைகள், இன்றைய யாழ்ப்பாண முஸ்லிம் மக்களது சமூக நிலை, யாழ்ப்பாணத் தமிழ் மக்களுடனான தற்போதைய உறவுநிலை ஆகிய பத்துத் தலைப்புகளின்கீழ் இவ்வாய்வு விரிகின்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 227642).