எம்.இந்திராணி. சுன்னாகம்: இளையோர் வட்டம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 2006. (யாழ்ப்பாணம்: சிமாட் பிரின்டர்ஸ், 717 கே.கே.எஸ்.வீதி).
v, 109 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏழாலை மண்ணில் வாழ்ந்த எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் இந்நூல் தகவல்களைப் பதிவுசெய்கின்றது. கனகி புராணம் என்ற நூலை நானூறு பாடல்கள் கொண்டதாகத் தொகுத்த நட்டுவச் சுப்பையனார் வாழ்ந்த இம்மண்ணில் இன்றளவில் பல்துறையினரும் பல்வேறு கலை, இலக்கிய, அறிவியல் நூல்களை எழுதி வந்துள்ளார்கள். தம் எழுத்துச் சாதனையால் சாஹித்திய மண்டலப் பரிசுகளையும் இந்து சமய விவகார அமைச்சின் விருதுகளையும் பெற்ற எழுத்தாளர்களும் இந்த மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் பற்றியதான இத்தொகுப்பு ஏழாலை மண்ணின் அறிவியல் செழுமையைக் காட்டுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50797).